அரியானா: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

இளைஞர்கள் 3 பேரும் காருக்குள் வைத்து மது குடித்துள்ளனர்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் சோனிபெட் மாவட்டம் பஹல்கேஷ் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 16ம் தெதி ஐடிஐ சவுக் பகுதியில் இருந்து தனது கிராமத்திற்கு செல்ல ஆட்டோவுக்கு காத்திருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த அதேகிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள், இளம்பெண்ணை கிராமத்தில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த காரில் இளம்பெண் ஏறியுள்ளார்.
இந்நிலையில், கிராமத்திற்கு செல்லும்வழியில் அந்த இளைஞர்கள் 3 பேரும் காருக்குள் வைத்து மது குடித்துள்ளனர். பின்னர், கிராமத்திற்கு அருகே ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு காரை ஓட்டிச்சென்ற இளைஞர்கள் அங்கு வைத்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து, இளம்பெண்ணை கிராமத்திற்கு அருகே இறக்கிவிட்டு விட்டு அந்த 3 இளைஞர்களும் காரில் தப்பிச்சென்றனர். நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களில் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய 2 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






