ஜார்க்கண்ட்: சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து


ஜார்க்கண்ட்: சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
x

சாண்டில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன.

ஜாம்ஷெட்பூர்,

ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா - கர்ஸ்வான் மாவட்டத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. முன்னதாக இன்று அதிகாலையில் சரக்கு ரெயிலானது சாண்டில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

சரக்கு ரெயில் தடம் புரண்டதால், தென்கிழக்கு ரெயில்வேயின் சாண்டில் - டாடாநகர் பிரிவுக்கு இடையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. சில ரெயில்கள் குறுகிய காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

1 More update

Next Story