அரபிக்கடலில் 11 நாட்களாக சிக்கி தவித்த 31 மீனவர்கள் மீட்பு

இந்திய கடலோர காவல் படை கஸ்தூர்பா காந்தி ரோந்து கப்பலையும், கொச்சியில் இருந்து ஒரு டோர்னியர் விமானத்தையும் அனுப்பியது.
அரபிக்கடலில் 11 நாட்களாக சிக்கி தவித்த 31 மீனவர்கள் மீட்பு
Published on

மங்களூரு,

கோவாவை சேர்ந்த மீன்பிடி படகில் 31 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றது. நடுக்கடலில் மீன்பிடி படகு செயலிழந்ததால் கொந்தளிப்பான அரபிக்கடலில் கடந்த 11 நாட்கள் சிக்கி தவித்தது. மங்களூருவில் இருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகு காணாமல் போனதாக வந்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை கஸ்தூர்பா காந்தி ரோந்து கப்பலையும், கொச்சியில் இருந்து ஒரு டோர்னியர் விமானத்தையும் அனுப்பியது.

டோர்னியர் விமானம் மீன்பிடி படகை கண்டறிந்தது தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து கஸ்தூர்பா காந்தி ரோந்து கப்பல் சென்று அங்கு தந்தளித்த மீன்பிடி படகை துறைமுகத்துக்கு இழுத்து வந்தது. பின்னர் மீன்பிடி படகில் சிக்கி தவித்த 31 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com