மணிப்பூரில் 330 கிலோ போதைப்பொருள் அழிப்பு


மணிப்பூரில் 330 கிலோ போதைப்பொருள் அழிப்பு
x

மணிப்பூரில் கடுமையான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த 2023-ல் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து வருகின்றனர்.

மேலும், மணிப்பூரில் சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக அரசு கடுமையான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட சுமார் 330 கிலோ போதைப்பொருள்களை போலீசார் தீயில் எரித்தனர்.

1 More update

Next Story