மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு


மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 24 July 2024 4:39 AM IST (Updated: 24 July 2024 1:04 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு மொத்தம் ரூ.3,442.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.45.36 கோடி அதிகமாகும். கடந்த முறை ரூ.3,396.96 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

இளைஞர்களின் திறமையை வளர்க்க நடத்தப்படும் கேலோ இந்தியா போட்டிகளுக்கு பெரும்பங்காக ரூ.900 கோடி அளிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.20 கோடி அதிகமாகும். தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.325 கோடியில் இருந்து ரூ.340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு அளிக்கப்படும் நிதி ரூ.795.77 கோடியில் இருந்து ரூ.822.60 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை கூடம் ஆகியவற்றுக்கான நிதி உதவியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story