மராட்டியம்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு


மராட்டியம்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
x

மராட்டியத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த 28ம் தேதி போராட்டம் நடைபெற்றது. தானே மாவட்டம் முப்ரா நகரில் இப்போராட்டம் நடைபெற்றது.

அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story