மேற்குவங்காளம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா மாவட்டம் ஹூக்லி நகரின் தாரெக்ஷ்வர் ரெயில் நிலையத்தில் 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் நேற்று இரவு உறங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, ரெயில் நிலையத்திற்கு வந்த மர்ம நபர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். பின்னர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர் சிறுயை ரெயில் நிலையம் அருகே விட்டுவிட்டு தப்பிச்சென்றார். சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு விரைந்து சென்ற அப்பகுதியினர் நிர்வாண நிலையில் இருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






