தனியாக உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி.. வீட்டிற்குள் நுழைந்த 5 கொள்ளையர்கள்- அதிர்ச்சி வீடியோ


தனியாக உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி.. வீட்டிற்குள் நுழைந்த 5 கொள்ளையர்கள்- அதிர்ச்சி வீடியோ
x

மூதாட்டி சத்தம் போட்டதால் பெட்ஷீட்டை கொண்டு மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பாலியை அடுத்த பக்தி என்ற பகுதியில், 75 வயது மூதாட்டி வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் 5 முகமூடி கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் மூதாட்டியின் தோடு மற்றும் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதனால் கொள்ளையர்கள் பெட்ஷீட்டை கொண்டு மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர். தொடர்ந்து மூதாட்டி குரல் எழுப்பியதால் அவரது மகன் உட்பட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனையடுத்து சில நகைகளை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் மூதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 5 முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தனியாக உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை நகைக்காக கொள்ளையர்கள் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story