நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை


நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Dec 2024 10:56 AM IST (Updated: 8 Dec 2024 11:55 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாணாரை சேர்ந்தவர் குட்டி கிருஷ்ணன் (வயது 60). இவருடைய மனைவி ஜெயந்தி. 2-வது மனைவியான ஜெயந்தியை கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி 2 வயதான மகள் கண் முன்னே வைத்து குட்டி கிருஷ்ணன் சுத்தியல் மூலம் தலையில் அடித்தும், கத்தியால் வெட்டியும், உளியால் குத்தியும் கொடூரமான முறையில் கொலை செய்தார்.

பின்னர் சம்பவம் நடந்த மறுநாள் போலீசில் சரண் அடைந்த குட்டி கிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த குட்டி கிருஷ்ணன், மனைவி ஜெயந்தியை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

இதனிடையே ஜாமீனில் வெளியேவந்த குட்டி கிருஷ்ணன் தலைமறைவானார். தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குட்டி கிருஷ்ணனை போலீசார் மீண்டும் 2023-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கு மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கினார். இதன்படி குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட குட்டி கிருஷ்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியதோடு, அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை அவரது மகளுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

1 More update

Next Story