ஆந்திராவின் பிரபல கார் தொழிற்சாலையில் 900 என்ஜின்கள் திருட்டு


ஆந்திராவின் பிரபல கார் தொழிற்சாலையில் 900 என்ஜின்கள் திருட்டு
x

ஆந்திர மாநிலத்தில் பிரபல கியா கார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டத்தின் பெனுகொண்டா மண்டலம் யர்ராமஞ்சி பகுதியில் பிரபல கியா கார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து சுமார் 900 கார் என்ஜின்கள் திருட்டு போய் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி போலீசில் புகார் அளித்தது. அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இந்த நிலையில் விசாரணைக்காக மூத்த காவல்துறை அதிகாரிகள் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளனர். மேலும் போலீசார் சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் பிரபல கியா கார் தொழிற்சாலையில் 900 என்ஜின்கள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story