ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடிக்கு சொகுசு காரா? வெடித்தது சர்ச்சை


ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடிக்கு சொகுசு காரா? வெடித்தது சர்ச்சை
x

ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை,

நாட்டின் பிரதமர், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் போன்ற முக்கிய தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் விசாரிக்க லோக்பால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது லோக்பால் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் மாணிக்ராவ் கான்வில்கரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.ஊழலை விசாரிக்க தொடங்கப்பட்டுள்ள லோக்பால் சமீபத்தில் அதன் உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் 7 பி.எம்.டபிள்.யு. சொகுசு கார்களை வாங்க டெண்டர் விட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லோக்பால் உறுப்பினர்களுக்கு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கும் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி) கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் தொடங்கப்பட்டது. தற்போது அது தனது உறுப்பினர்களுக்கு பி.எம்.டபிள்யு. ரக கார் வாங்குகிறதா?. இது நேர்மையாக வரி செலுத்தும் மக்களின் வரி பணத்தை கொள்ளையடிப்பது போன்றதாகும். இந்த பிரச்சினையில் இருந்து மத்திய பா.ஜனதா அரசு விலகி செல்லக்கூடாது. உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story