ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனையான ஒரு ஜோடி செம்மறி ஆட்டு கிடா


A pair of sheep and goats sold for Rs. 1.60 lakh
x

ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனையான ஆட்டு கிடாக்கள், கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

பெங்களூரு,

மண்டியா பண்டூர் இன செம்மறியாடுகளுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. ஒரு செம்மறி ஆட்டு கிடா ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மண்டியாவை சேர்ந்த வாலிபர் தனது ஒரு ஜோடி ஆட்டு கிடாவை ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கிருகவாலு கிராமத்தை சேர்ந்தவர் உல்லாஸ் கவுடா (வயது 24). இவர் பண்டூர் இன செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். பண்டூர் செம்மறி ஆடுகள் இனம் அழிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் உல்லாஸ் கவுடா அந்த இன ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அவர், தான் வளர்த்து வந்த ஒரு ஜோடி பண்டூர் இன செம்மறி ஆட்டு கிடாவை வத்தரஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான குமார் மறும் குல்லேகவுடா ஆகியோருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்று உள்ளார். இதையடுத்து அந்த ஆட்டு கிடாக்கள் கிருகவாலு கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

1 More update

Next Story