சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அனில் அம்பானி மீது வழக்கு


சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அனில் அம்பானி மீது வழக்கு
x

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மும்பை,

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி செய்த முறைகேடுகளால் ரூ.2 ஆயிரத்து 929 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தை ‘மோசடி நிறுவனம்’ என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ.யில் புகார் அளித்தது.

அந்த புகாரில், " ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் பல்வேறு வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் நிலுவை வைத்து உள்ளது. இதில் ஸ்டேட் வங்கிக்கு மட்டும் ரூ.2 ஆயிரத்து 929.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது " என கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் அதன் நிறுவனர் அனில் அம்பானி மீது குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story