டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு; மக்களுக்கு பெரும் பாதிப்பு

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து  அதிகரிப்பு; மக்களுக்கு பெரும் பாதிப்பு
x

காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறுகளும் அதிகரித்து காணப்படுகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சன்சாத் மார்க் பகுதியில், காற்று தர குறியீடு மிக மோசம் (356) என்ற அளவில் பதிவாகி மக்களை மிரட்டி வருகிறது. இதனை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்துகிறது. காலையிலேயே பனி படர்ந்து தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.

காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறுகளும் அதிகரித்து காணப்படுகிறது.

நகரின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்போர்வை போத்தியது போன்று உள்ளது. இதனால், வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை காணப்படுகிறது. குளிர்காலம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், அதற்கு முன்பே பல பகுதிகளிலும் காலையிலேயே பனி மூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

1 More update

Next Story