ஷாங்காய்-டெல்லி இடையே மீண்டும் விமான போக்குவரத்து


ஷாங்காய்-டெல்லி இடையே மீண்டும் விமான போக்குவரத்து
x

இண்டிகோ நிறுவனம் முதல் முறையாக கடந்த 26-ந்தேதி கொல்கத்தா-குவாங்சு இடையே விமானப்போக்குவரத்தை தொடங்கியது.

புதுடெல்லி,

கொரோனா மற்றும் கிழக்கு லடாக் எல்லை மோதல் காரணமாக இந்தியா- சீனா இடையேயான நேரடி விமானப்போக்குவரத்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இரு நாட்டு உறவுகள் மேம்பட்டதால் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஆர்வம் காட்டின. அத்துடன் இதற்கான நடவடிக்கைகளையும் இருதரப்பும் முடுக்கி விட்டிருந்தன.

இதைத்தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் முதல் முறையாக கடந்த 26-ந்தேதி கொல்கத்தா-குவாங்சு இடையே விமானப்போக்குவரத்தை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று ஷாங்காய்- டெல்லி இடையே விமானப்போக்குவரத்தை தொடங்கியது. ஷாங்காயின் புடோங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 248 பயணிகளுடன் விமானம் ஒன்று டெல்லி வந்தது.

ஷாங்காய்- டெல்லி வழித்தடம் இரு நாடுகளுக்கு இடையேயான விமான சேவையின் முக்கிய வழித்தடமாக கருதப்படுகிறது. இதன் மூலம் வர்த்தகம், பொருளாதாரம், கலாசாரம் போன்ற துறைகளில் உத்வேகம் ஏற்படும் என கருதப்படுகிறது. ஷாங்காய்- டெல்லி இடையே 5 ஆண்டுகளுக்குப்பிறகு விமான போக்குவரத்து தொடங்கியிருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story