கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருக்கும்போது திடீரென ஏற்பட்ட தகராறு - காதலன் செய்த சம்பவம்


கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருக்கும்போது திடீரென ஏற்பட்ட தகராறு -  காதலன் செய்த சம்பவம்
x
தினத்தந்தி 23 Aug 2025 11:17 PM IST (Updated: 23 Aug 2025 11:19 PM IST)
t-max-icont-min-icon

சிவலோசுவுக்கும், மீனாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் காதலித்து வந்தனர்.

இடுக்கி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், அடிமாலி அருகே உள்ள கொன்னம்தடி பகுதியை சேர்ந்தவர் சிவலோஷ் (வயது 28). இவர், தொடுபுழா அருகே வாழைக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேலாண்மை படிப்பு படித்து வந்தார். எனவே சிவலோசுவின் குடும்பத்தினர், வாழைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

அடிமாலியை அடுத்த பாறைத்தோடு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (20). இவர், வாழைக்குளம் பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். அப்போது சிவலோசுவுக்கும், மீனாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் சிவலோசின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தனர். சிவலோஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்றைய தினம் மாலை அவரது நண்பர் ஒருவர் பலமுறை சிவலோசை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட அவர், சிவலோசின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டுக்குள் ஒரு அறையில் சிவலோஷ் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில் மீனாட்சி துணியால் கழுத்தை நெரித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதலர்களான சிவலோசுவும், மீனாட்சியும், சிவலோசின் வீட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினமும் வீட்டில் யாரும் இல்லாதபோது, 2 பேரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சிவலோஷ், மீனாட்சியை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story