‘பண்டைய கால இந்தியர்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை' - மோகன் பகவத் பேச்சு


‘பண்டைய கால இந்தியர்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை -  மோகன் பகவத் பேச்சு
x
தினத்தந்தி 20 Oct 2025 4:45 AM IST (Updated: 20 Oct 2025 4:46 AM IST)
t-max-icont-min-icon

பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் மெக்சிகோவில் இருந்து சைபீரியா வரை பயணம் செய்து உலகிற்கு அறிவியல் மற்றும் கலாசாரத்தை போதித்தனர்.

மும்பை,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பலர் இந்தியாவை படையெடுத்து வந்து நமது நாட்டை கொள்ளையடித்து உள்ளனர், அடிமைப்படுத்தி உள்ளனர். கடைசியாக நமது நாட்டுக்குள் நுழைந்தவர்கள் நமது எண்ணங்களையும் கொள்ளையடித்தனர்.

பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் மெக்சிகோவில் இருந்து சைபீரியா வரை பயணம் செய்து உலகிற்கு அறிவியல் மற்றும் கலாசாரத்தை போதித்தனர். ஆனால் அவர்கள் அங்கு யாரையும் மதம் மாற்றவோ அல்லது தாங்கள் சென்ற பகுதியை கைப்பற்றவோ இல்லை. நாம் நல்லெண்ணம், ஒற்றுமையின் செய்தியுடன் மட்டுமே சென்றோம். நம் நாட்டில் ஆன்மிக அறிவு இன்னும் செழிப்பாக உள்ளது. நம்மிடம் அறிவியல், ஆயுதபலம், சக்தி, நம்பிக்கை மற்றும் ஞானம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story