ஆந்திர பிரதேசம்: பள்ளி நேரத்தில் ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவர்கள்; வைரலான வீடியோ

ஆசிரியை, நாற்காலி ஒன்றில் சாய்ந்து கொண்டு மொபைல் போனில் பேசியபடி வீடியோவில் உள்ளார்.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பந்தப்பள்ளி பெண்கள் பள்ளியில், பணி நேரத்தில் ஆசிரியைக்கு மாணவர்கள் மசாஜ் செய்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் ஆசிரியை, நாற்காலி ஒன்றில் சாய்ந்து கொண்டு மொபைல் போனில் பேசியபடி உள்ளார். பள்ளி சீருடையில் இருந்த மாணவிகள் சிலர் அவருக்கு அருகே அமர்ந்து இருந்தனர்.
அரசு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டதுடன், அந்த ஆசிரியைக்கு சஸ்பெண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு கல்வி அளிக்க கூடிய இடத்தில் நடந்த இதுபோன்ற சம்பவம் ஏற்று கொள்ள முடியாத ஒன்று என கூறிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து உள்ளனர்.
Related Tags :
Next Story






