வாட்ஸ் அப்பில் வரவிருக்கும் வேற லெவல் அப்டேட்கள்

பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்வது புதிய அம்சங்களை பெறலாம்.
வாட்ஸ் ஆப்பில் சில சுவாரசியமான அம்சங்களை களமிறக்க உள்ளனர். ஐ.ஓ.எஸ் பயனர்கள் லைவ் போட்டோஸ் (Live Photos) மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் மோஷன் போட்டோஸ்-ஐ (Motion Photos) ஸ்டேட்டஸ் மற்றும் சாட்களில் பகிரும் வசதியை வெகுவிரைவில் வழங்க உள்ளனர்.
மேலும் சாட்களில் இருந்து வெளியேறாமல் மெசேஜ்களை மொழிபெயர்க்கும் (Message Translation) வசதியும், குரூப் சாட்களில் மெசேஜ்களுக்குப் பதிலளிக்கும் திரெட்டட் ரிப்பிளைஸ் (Threaded replies) மற்றும் வீடியோ நோட்ஸ் (Video Notes) அனுப்பும் வசதியையும் கொண்டு வர உள்ளனர். அதனால் பயனர்கள் தங்கள் வாட்ஸ் ஆப்பை அடிக்கடி அப்டேட் செய்வது புதிய அம்சங்களைப் பெற உதவும்.
Related Tags :
Next Story






