ஜியோ சிம் பயன்படுத்துறீங்களா? கூகுள் ஏஐ மெகா சலுகை

கூகுள் நிறுவனம் தனது ஜெமினி புரோ பதிப்பை ஜியோ சிம்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு உரையாடு செயலியான சாட் ஜி.பி.டி தனது புதிய பயனர்களுக்கு நவீன 'ப்ரோ' பதிப்பை 1 ஆண்டுக்கு இலவசமாக தருவதாக அறிவித்தது. கூகுள், பர்பிளெக்ஸ்சிட்டி ஏ.ஐ., டீப்சிக் உள்ளிட்ட ஏ.ஐ. நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் கூகுள் நிறுவனம் தனது ஜெமினி புரோ பதிப்பை ஜியோ சிம்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1½ ஆண்டுகளுக்கு இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது. ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






