அருந்ததி ராய் எழுதிய ’ஆசாதி' புத்தகத்திற்கு காஷ்மீரில் தடை விதிப்பு

புத்தகத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய கருத்துகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
ஸ்ரீநகர்,
இந்தியாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவருடைய ‘காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ புத்தகத்திற்காக புத்தக உலகின் நோபல் பரிசான புக்கர் பரிசை வென்றவர். இவர் ‘ஆசாதி’ என்ற தலைப்பில் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.
இந்தநிலையில் இந்த புத்தகத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய கருத்துகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதன்பேரில் காஷ்மீரில் அருந்ததி ராய் எழுதிய ஆசாதி புத்தகம் விற்பனை மற்றும் அச்சிடுதலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரை மையமாக கொண்டு உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களான மவுலானா மவுடடி, நூரானி, விக்டோரிய சுகோபீல்டு, டேவிட் தேவ்தாஸ் உள்ளிட்டோர் எழுதிய 25 புத்தகங்களுக்கு காஷ்மீரில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






