தலைமை நீதிபதி மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது - பிரதமர் மோடி


தலைமை நீதிபதி மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது - பிரதமர் மோடி
x

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்விரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயற்சித்துள்ளார். நல்வாய்ப்பாக சுப்ரீம் கோர்ட்டு காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இந்தநிலையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற அறையில் காலணியை வீசி தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஜி அவர்களிடம் பேசினேன். தலைமை நீதிபதி மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்விரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை. இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். நீதியின் மதிப்பு, அரசமைப்பை வலுப்படுத்தும் கவாயின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது என அதில் பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story