இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: ஆசாமி கைது


இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: ஆசாமி கைது
x
தினத்தந்தி 4 July 2025 3:59 AM IST (Updated: 4 July 2025 4:04 AM IST)
t-max-icont-min-icon

தனியாக இருந்த இளம்பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டினார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரிஞ்சனம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 42). இவர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த இளம்பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டினார். தொடர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண் சத்தம் போட்டு உள்ளார்.

இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதையடுத்து மனோஜ் அரிவாளை காட்டி அவர்களையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் கைப்பமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிஜு, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மீது மதிலகம், அந்திக்காடு, கைப்பமங்கலம், திருச்சூர் (மேற்கு,) சொர்ணூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story