மராட்டியத்தில் பயணியை குத்திக்கொன்ற ஆட்டோ டிரைவர் - 24 வருடங்களுக்கு பிறகு கைது


மராட்டியத்தில் பயணியை குத்திக்கொன்ற ஆட்டோ டிரைவர் - 24 வருடங்களுக்கு பிறகு கைது
x

ஆட்டோ பயணத்திற்கான கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நிகழ்ந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி, ஆட்டோ டிரைவரான முஸ்தகின் அலி சையத் என்பவர், தனது ஆட்டோவில் பயணம் செய்த முகரம் அலி முகமது இப்ராகிம்(வயது 56) என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆட்டோ பயணத்திற்கான கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஆட்டோ டிரைவர் முஸ்தகின் அலி தலைமறைவானார். அதன் பிறகு அவரது இருப்பிடம் தொடர்பான தகவல்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு முடிவு பெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கொலை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிக்க தொடங்கினர். குற்றவாளி முஸ்தகின் அலி உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது சொந்த ஊருக்கு சென்று அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சுமார் 5 மாதங்களாக போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு பல்கார் மாவட்டத்தில் பதுங்கியிருந்த முஸ்தகின் அலி அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story