மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு செய்து வருகிறது - ராகுல் காந்தி காட்டம்


மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு செய்து வருகிறது - ராகுல் காந்தி காட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2026 2:30 AM IST (Updated: 28 Jan 2026 2:30 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து அதிகாரங்களும் சிலரிடம் இருப்பதால்மன்னர்கள் காலத்துக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய பா.ஜனதா அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அழிக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. தொழிலாளர்களின் ஊதிய பேரம் பேசும் உரிமையை பறிப்பது, பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பறிப்பது போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

அனைத்து அதிகாரங்களும் ஒரு சிலரின் கைகளில் குவிந்திருந்த மன்னர்கள் காலத்திற்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தங்கள் வாழ்க்கையை மாற்றியதாக கூறிய அதே தொழிலாளர்கள், இப்போது மோடி அரசாங்கம் "தொழிலாளர்களை அடிமைப்படுத்துகிறது" என்று கூறுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story