பஞ்சாப்: கோர்ட்டு, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


பஞ்சாப்: கோர்ட்டு, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

வெடிகுண்டு மிரட்டல்

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் இன்று வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கோர்ட்டின் பதிவாளருக்கு இன்று மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த மெயிலில் கோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் கோர்ட்டில் இருந்தவர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

இதையடுத்து கோர்ட்டில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்ட்ல தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், பஞ்சாப்பின் மொகா மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், பள்ளியில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி, கோர்ட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story