புதுச்சேரி துணைநிலை கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடந்த 2 மாதங்களில் 6-வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
புதுச்சேரி துணைநிலை கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, முதல் மந்திரியின் வீடு, கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை கவர்னர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

மிரட்டலை தொடர்ந்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு கடந்த 2 மாதங்களில் 6-வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com