வருங்கால மருமகனுடன் ஓட்டம்பிடித்த மாமியார் ... மணப்பெண் 'ஷாக்'


வருங்கால மருமகனுடன் ஓட்டம்பிடித்த மாமியார் ... மணப்பெண் ஷாக்
x
தினத்தந்தி 9 April 2025 9:24 AM IST (Updated: 9 April 2025 12:38 PM IST)
t-max-icont-min-icon

மணமகனுக்கும், மணமகளுக்கும் 16ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ரக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு அதேமாவட்டத்தை சேர்ந்த இளைஞருடன் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இளம்பெண்ணுக்கு அவரது தாயார் மணமகன் தேர்வு செய்துள்ளார். திருமணம் 16ம் தேதி நடைபெறவிருந்தது. இதனிடையே, மணமகனுக்கும் அவரது வருங்கால மாமியாரான மணமகளின் அம்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் மணப்பெண்ணுக்கோ, குடும்பத்தினருக்கோ தெரியவில்லை.

இருவருக்கும் இடையேயான காதல் வளர்ந்த நிலையில் மணமகன் தனது வருங்கால மாமியாரான காதலிக்கு செல்போன் பரிசளித்துள்ளார். மாமியாருக்கு , மருமகன் செல்போனை பரிசளித்துள்ளான் என குடும்பத்தினர் நினைத்துள்ளனர். அந்த செல்போன் மூலம் இருவரும் அடிக்கடி பேசியுள்ளனர்.

இந்நிலையில், வரும் 16ம் தேதி மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு இன்னும் 9 நாட்களே இருந்த நிலையில் வருங்கால மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்துள்ளார்.

திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க ஷாப்பிங் செல்வதாக கூறிய மணப்பெண்ணின் தாயார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகளின் திருமணத்திற்கு சேமித்து வைத்திருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதேபோல், மணமகனும் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர், வருங்கால மருமகனை அழைத்துக்கொண்டு மாமியார் ஓட்டம் பிடித்துள்ளார்.

ஷாப்பிங் சென்ற மனைவி வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராதது குறித்து சந்தேகம் அடைந்த அப்பெண்ணின் கணவர், மகளான மணப்பெண் வீட்டில் சோதனை செய்துள்ளனர்.அப்போது வீட்டில் இருந்த பணம், நகை மாயமானது தெரியவந்தது. உடனடியாக மணமகனுக்கு போன் செய்துள்ளார். அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்ததால் ஷாக் ஆன மணப்பெண் குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

திருமணத்திற்கு 9 நாட்களே உள்ள நிலையில் வருங்கால மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story