ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி


ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி
x
தினத்தந்தி 21 Jun 2024 12:44 PM IST (Updated: 21 Jun 2024 1:48 PM IST)
t-max-icont-min-icon

லாரி மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் இருந்து சிலர் ஜெய்ப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் கிஷன்கர்-பில்வாரா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் சிகார் பகுதியை சேர்ந்த தினேஷ் (35), அவரது மனைவி சோனு (32), அவர்களது மகன் பானு (இரண்டரை வயது) மற்றும் பிரதீப் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Next Story