புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி

இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐதராபாத்,
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் 32-29 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை தோற்கடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 37-25 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுக்கு அதிர்ச்சி அளித்தது. இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்- தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





