மத்திய அரசு ரூ. 5,300 கோடியை ஒதுக்கவில்லை- சித்தராமையா குற்றச்சாட்டு


மத்திய அரசு ரூ. 5,300 கோடியை ஒதுக்கவில்லை- சித்தராமையா குற்றச்சாட்டு
x

துமகூரு மாவட்டம் பாவகடாவுக்கு சென்றால் முதல் -மந்திரி பதவி பறிபோகும் என்ற மூடநம்பிக்கை உள்ளது.

துமகூரு மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அவற்றில் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு துங்க பத்ரா ஆற்று குடிநீர் வழங்கும் திட்டமும் ஒன்றாகும். இதற்காக பாவகடாவில் உள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

துமகூரு மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பாவகடா தாலுகா மக்களின் நீண்ட கால கனவான குடிநீர் திட்டம் முக்கியமானதாகும். இதற்கு முன்பு இந்த குடிநீர் திட்டத்திற்கு நான் முதல்-மந்திரியாக இருந்த போது அடிக்கல் நாட்டினேன். தற்போது இந்த திட்டத்தை நானே தொடங்கி வைத்துள்ளேன். இதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.

பத்ரா குடிநீர் திட்டம் மூலமாக 180 கிராம மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாவகடா டவுன் டவுன் பகுதிக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பத்ரா மேல் அணை திட்டத்திற்காக மத்திய அரசு தருவதாக கூறிய ரூ 5300 கோடியை வழங்கவில்லை. ஆனாலும் கர்நாடக அரசு நிதியை ஒதுக்கி தும்கூர் மாவட்டத்திற்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்களை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story