நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது பாம்பு கடித்து கோப்ரா பட்டாலியன் வீரர் உயிரிழப்பு

நுர்தா வனப்பகுதியில் நக்சல் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்க்பம் மாவட்டத்தில் உள்ள நுர்தா வனப்பகுதியில் நக்சல் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு படை வீரர்கள், ரிசர்வ் காவல் படையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது, பாதுகாப்பு படையின் ‘கோப்ரா’ பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த சந்தீப் குமார் என்ற வீரரை பாம்பு கடித்தது. இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தீப் குமார் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






