120 வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்களுக்கு ஒப்பந்தம்- ரெயில்வே மந்திரி தகவல்


120 வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்களுக்கு ஒப்பந்தம்- ரெயில்வே மந்திரி தகவல்
x

16 பெட்டிகள் கொண்ட 120 ரெயில்களை தயாரிக்க டெல்லி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், 'தற்போதைய நிலையில் சென்னை ஐ.சி.எப். நிறுவனம் 10 வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்களை தயாரித்து வருகிறது. மேலும் 50 வந்தே பாரத் படுக்கை வசதி பெட்டிகளும் அங்கே தயாரிக்கப்படுகின்றன' என்றார்.

மேலும், 'இதைத்தவிர தொழில்நுட்ப பங்குதாரர்களிடம் 200 வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்கள் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளன. இதில் தலா 16 பெட்டிகள் கொண்ட 120 ரெயில்களை தயாரிக்க டெல்லி கினெட் ரெயில்வே சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இது அசல் ஒப்பந்த ஒப்பந்தத்தின்படி உள்ளது' என்றும் கூறினார்.

1 More update

Next Story