ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும் சிறையில் இருக்க வேண்டும்; அதிகாரத்தில் அல்ல - பிரதமர் மோடி


ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும் சிறையில் இருக்க வேண்டும்; அதிகாரத்தில் அல்ல - பிரதமர் மோடி
x

கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்

கொல்கத்தா,

பிரதமர் மோடி இன்று மேற்குவங்காளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் இன்று கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

இதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது, பிரதமரோ, முதல்-மந்திரியோ, மந்திரிகளோ குற்றவழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை. அவர்கள் எந்தவித வெட்கமுமின்றி சிறையில் இருந்தவாறு அரசுகளை நடத்துகின்றனர். ஆசிரியர்கள் தேர்வு தொடர்பான முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி (சந்திரநாத் சின்ஹா) இன்னும் சிறையில் உள்ளார். ஆனால், அவர் தற்போதுவரை தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்துகொண்டு யாரும் உத்தரவிடக்கூடாது. ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும் சிறையில் இருக்க வேண்டுமே தவிர அதிகாரத்தில் அல்ல’ என்றார்.

முன்னதாக, பிரதமர், முதல்-மந்திரிகள், மந்திரிகள் ஆகியோர் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க கடுமையான குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31-வது நாளில் அவர்களை பதவியில் இருந்து நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story