நடனமும், இசையும் மக்களை ஒன்றிணைக்கிறது - துணை ஜனாதிபதி
நடனமும், இசையும் மக்களை ஒன்றிணைக்கிறது என்று துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
சர்வதேச இந்திய நடன திருவிழா நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இறுதிநாளான இன்று விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பேசியதாவது, கலை ஆதிக்கத்தை வரையறுக்கவில்லை. அது ஒருங்கிணைப்பை வரையறுக்கிறது. கலாச்சார ராஜதந்திரத்தின் ஒரு சிறந்த அம்சம் நடனம். மோதல்கள் நிறைந்த உலகில் மக்களை நடனமும், இசையும் ஒன்றிணைக்கிறது. நடன கலைஞர்கள்தான் கலாசாரம், அமைதிக்கான தூதர்கள்' என்றார்.
Related Tags :
Next Story