இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு - தேர்தல் ஆணையம் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு - தேர்தல் ஆணையம் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அளித்திருந்தது.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்ற ஆணைக்கு பிறகும் முடிவெடுக்காமல் தாமதித்த தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அளித்தது. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

1 More update

Next Story