டெல்லி: கடும் குளிருக்கு மத்தியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் வீரர்கள்


டெல்லி: கடும் குளிருக்கு மத்தியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் வீரர்கள்
x
தினத்தந்தி 1 Jan 2026 8:29 AM IST (Updated: 1 Jan 2026 8:34 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

புதுடெல்லி,

நாட்டின் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் நாட்டின் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவையும் அப்போது நடைபெறும்.

இதேபோன்று, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும்.

குடியரசு தின விழாவையொட்டி, ராணுவ வீரர்கள் உள்ளிட்ட இந்திய ஆயுத படைகள் டெல்லி கடமை பாதையில் கடும் குளிருக்கு மத்தியில், குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. பனிமூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், மக்கள் வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன், செல்லும்போது முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். இதுதவிர்த்து, காற்று மாசும் அதிகரித்து மக்களை அல்லல்படுத்தி வருகிறது. இதனால், சுவாச பாதிப்பு, நோய் தொற்றுக்கு ஆளாக கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story