புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார். அதில் புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பின் 1.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, மாஹே, ஏனாம் பகுதிகளில் 85,531 வாக்காளர்களும், காரைக்காலில் 17,936 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 9.18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி, ஏனாம், மாஹேவில் 8,51,775 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாவட்டத்தில் 3,60,396 ஆண்கள், 4,05,728 பெண்கள், 120 மூன்றாம் பாலினத்தவர் என 7,66,244 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன் 10.21 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்தனர்.
தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தால் வரும் ஜனவரி 15-ம் தேதி வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். வரைவுப் பட்டியலில் பெயர் விடுபட்ட, வேறு பகுதிக்கு குடிபெயர்ந்த, இறந்த மற்றும் போலி வாக்காளர்கள் குறித்த தகவல்களும் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, மாஹே, யேனா பகுதிகளில் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் நிறைவையொட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.






