அசாமில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது


அசாமில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது
x

கோப்புப்படம்

இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு அசாமின் முதல்-மந்திரி போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திஸ்பூர்,

அசாமின் ஸ்ரீபூமி மாவட்ட போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வெட்டர்பாண்ட் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சந்தேகத்திற்கிடமான 5 பேரிடம் போலீசார் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அவர்களிடமிருந்து ரூ. 6.5 கோடி மதிப்புள்ள 40,000 யாபா மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போதை மாத்திரைகளை கடத்தி வந்த 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாருக்காக கொண்டு வரப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு அசாமின் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

1 More update

Next Story