துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பது எப்போது? - வெளியான தகவல்


துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பது எப்போது? - வெளியான தகவல்
x

துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது.

டெல்லி,

துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 781 வாக்குகளில் 767 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை எண்ணப்பட்டன. இதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 752 வாக்குகளில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதையடுத்து, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பது எப்போது? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்ற நிலையில் அவர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. வெற்றி சான்றிதழை மத்திய உள்துறை செயலாளருக்கு தலைமை தேர்தல் ஆணையர் அனுப்பி வைத்துள்ளார்.

1 More update

Next Story