திருப்பதி தேவஸ்தானம் பெயரி்ல் போலியாக செயல்படும் கணக்குகள்: பக்தர்களுக்கு எச்சரிக்கை


திருப்பதி தேவஸ்தானம் பெயரி்ல் போலியாக செயல்படும் கணக்குகள்: பக்தர்களுக்கு எச்சரிக்கை
x

போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமலை,

திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளாராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் பெயரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பேஸ் புக்கில் போலி கணக்கை உருவாக்கி, பக்தர்களிடம் இருந்து பணம் கோரி செய்திகளை அனுப்புவதாக தகவல்கள் வருகின்றன.

இது, முற்றிலும் மோசடியான செயலாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இவ்வாறான போலி கணக்குகளை நம்ப வேண்டாம். யாருக்கேனும் சந்தேகப்படும் படியாக செய்திகள் வந்தால், தேவஸ்தான பறக்கும் படை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் பக்தர்கள் www.tirumala.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தேவஸ்தான அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலம் வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இதர போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story