அருணாச்சல பிரதேசத்தில் தீ விபத்து: 15 கடைகள் தீயில் கருகி நாசம்

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் தீயில் கருகி நாசமாகின.
இட்டாநகர்,
அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஹயுலியாங் சந்தையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ ஏற்பட்டது. இந்த தீயானது வேகமாக பரவிய நிலையில் தியணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சந்தையில் மரத்தால் கட்டப்பட்ட 15 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைக்கால நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் தசங்லு புல், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
Related Tags :
Next Story






