ஜன்னல் ஓட்டையில் சிக்கிய மாணவியின் ஒற்றை விரல் - மீட்க போராடிய தீயணைப்புத் துறையினர்

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியின் விரல் பஸ்சின் ஜன்னல் ஓரத்தில் உள்ள ஓட்டையில் சிக்கிக் கொண்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி முடிந்து மாணவர்களை பள்ளி பேருந்து ஏற்றிச் சென்றது. அப்பொழுது ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தனது பேருந்து நிறுத்தம் வந்தபோது பேருந்தில் இருந்து இறங்குவதற்காக எழுந்த போது ஜன்னல் ஓரத்தில் இருந்த ஓட்டையில் விரல் சிக்கிக்கொண்டதை உணர்ந்தார்.
இது குறித்து பேருந்தின் டிரைவரிடம் தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் மாணவியின் விரலை எடுக்க முற்பட்டபோதும் ஓட்டையில் சிக்கி இருந்த விரல் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி பேருந்தின் தகரத்தை கட்டர் மூலம் வெட்டி எடுத்து மாணவியின் சிக்கிக்கொண்ட விரலை வெளியே எடுத்தனர்.
Related Tags :
Next Story






