அரியானாவில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி


அரியானாவில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி
x

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டம் அம்பாலா புப்கா கிராமத்தை சேர்ந்த ரிஷிபாலின் என்பவரின் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு காரில் குடும்பத்தினர் 6 பேர் முலானாவு என்ற இடத்துக்கு சென்று கொண்டு இருந்தனர்.

கார் கரார்சி கிராமம் அருகே நேற்று அதிகாலை சென்றபோது எதிரே வந்த மற்றொரு கார் மோதியது. இதில் அந்த காரில் இருந்தவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரிஷிபாலின் காரில் இருந்த 4 பேர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story