ராகுல் டிராவிட் கார் மீது சரக்கு ஆட்டோ மோதல்

ராகுல் டிராவிட் கார் மீது சரக்கு ஆட்டோ மோதியது
பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். இவர் தனது காரில் நேற்று மாலை ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட கன்னிகாம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த சரக்கு ஆட்டோ, டிராவிட் கார் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த டிராவிட் கீழே இறங்கி வந்து, ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடினர். இதையடுத்து டிராவிட், ஆட்டோ டிரைவரிடம் செல்போன் எண் மற்றும் வீட்டு முகவரி தொடர்பான விவரங்களை பெற்று கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து எந்த புகாரும் அவர் போலீசில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. டிராவிட் கார் விபத்துக்குள்ளானது மற்றும் ஆட்டோ டிரைவரிடம் அவர் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த குறித்து வீடியோ ஐகிரவுண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.