‘சொந்த சமூகத்தினரால் விமர்சிக்கப்பட்டேன்' சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி வேதனை


‘சொந்த சமூகத்தினரால் விமர்சிக்கப்பட்டேன் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி வேதனை
x

கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது. என்று பிஆர் கவாய் கூறினார்.

மும்பை,

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மும்பை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்திரா சாவ்னி வழக்கு கிரீமிலேயர் கொள்கையை விளக்கி உள்ளது. மற்றொரு வழக்கில் பட்டியல் சமூகத்தினருக்கும் கிரீமிலேயர் முறையை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டது. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் போதுமான அளவு முன்னேறியவர்கள் பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இடஒதுக்கீடு பலனை பெறக்கூடாது என கொள்கைகள் கூறுகின்றன.

இதை கூறியதற்காக எனது சொந்த சமூகத்தினரால் நான் விமர்சிக்கப்பட்டேன். இடஒதுக்கீட்டின் பலனை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாகி, கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பதவிக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பது கூட என்னை விமா்சித்தவர்களுக்கு தெரியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story