‘அகிலேஷ் யாதவ் பேஸ்புக் கணக்கு முடக்கத்திற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை’ - மத்திய மந்திரி விளக்கம்

அகிலேஷ் யாதவின் பேஸ்புக் கணக்கு நேற்று இரவு சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக சமாஜ்வாடி கட்சி உள்ளது. இதன் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அகிலேஷ் யாதவின் பேஸ்புக் கணக்கு நேற்று மாலை முடக்கப்பட்டது. சுமார் 85 லட்சம் பேர் பின்தொடர்ந்து வரும் இந்த கணக்கு முடக்கம் எதிர்க்கட்சிகளின் குரலை நெரிக்கும் பா.ஜனதாவின் சதி என சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியது.
அகிலேஷ் யாதவின் பேஸ்புக் கணக்கு முடக்கத்திற்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு அகிலேஷ் யாதவின் பேஸ்புக் கணக்கு சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த தகவலை கட்சி நிர்வாகிகள் உறுதி செய்தனா்.
Related Tags :
Next Story






