கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை கடுமையாக தாக்கிய மக்கள்

வயல்வெளியில் நுழைந்த சிறுத்தையை சிலர் கட்டையால் தாக்கினர்.
சிம்லா,
இமாச்சலபிரதேச மாநிலம் உன்னா மாவட்டம் கமர்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் கடந்த 22ம் தேதி சிறுத்தை நுழைந்தது. சிறுத்தையை கண்டு கிராம மக்கள் அலறியடித்து ஓடினர். அதேவேளை, சிலர் சிறுத்தையை விரட்டிச்சென்றனர்.
கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நுழைந்த சிறுத்தையை சிலர் கட்டையால் தாக்கினர். அப்போது கிராமத்தினர் 3 பேரை சிறுத்தை தாக்கியது. இதில் 3 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து, கிராம மக்கள் சிறுத்தியை விரட்டியடித்தனர். சிறுத்தை கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது. பின்னர், காயமடைந்த 3 பேரையும் மீட்ட கிராமத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கிராமத்தினரை சிறுத்தை தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






