ஆர்டர் கொண்டுவர தாமதமானதால் வாடிக்கையாளர் செய்த கொடூர செயல் - பதற வைக்கும் வீடியோ காட்சி


ஆர்டர் கொண்டுவர தாமதமானதால் வாடிக்கையாளர் செய்த கொடூர செயல் -  பதற வைக்கும் வீடியோ காட்சி
x

கேரளாவில் உணவு தர தாமதித்த உணவக ஊழியர்கள் மீது கார் ஏற்றிக்கொல்ல முயன்ற சம்பவத்தின் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். சம்பவத்தன்று அவரது நண்பர் நிஜாமுதினுடன் அப்பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார்.

இருவரும் உணவுகளை ஆர்டர் செய்து விட்டு உணவிற்காக காத்திருந்தனர். ஆனால் வெகு நேரமாகியும் அங்குள்ள பணியாளர்கள் உணவு தர தாமதித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்துல் ஹக்கீம், வேலை முடிந்து நின்று கொண்டிருந்த உணவக ஊழியர்கள் மீது காரை வைத்து ஏற்ற முயன்றார்.

இதில் அனைவரும் ஓடி உயிர்தப்பிய நிலையில் ஒருவர் மட்டும் காயமடைந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்துல் ஹக்கீம் மற்றும் அவரது நண்பர் நிஜாமுதின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கேரளாவில் உணவு தர தாமதித்த உணவக ஊழியர்கள் மீது கார் ஏற்றிக்கொல்ல முயன்ற சம்பவத்தின் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்லது.

1 More update

Next Story