மனைவி, மாமியாரை நிர்வாணமாக பூஜை செய்ய வற்புறுத்திய கணவர் கைது

ஆடையின்றி பூஜை செய்யும் புகைப்படங்களை மனைவியின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நவி மும்பை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், மாந்திரீகம் உள்ளிட்ட விவகாரங்களில் அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார். இவரது மனைவியின் சகோதரருக்கு திருமணமாகாமல் இருந்து வந்துள்ளது. எனவே, திருமண தடை நீங்குவதற்கு சில சடங்குகளை செய்ய வேண்டும் என்று தனது மனைவியிடம் அவர் கூறியுள்ளார்.
அதன்படி தனது மனைவியையும், மாமியாரையும் நிர்வாணமாக பூஜை செய்ய அந்த நபர் வற்புறுத்தியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு அந்த இரு பெண்களும் அவர் சொன்னதை எல்லாம் செய்துள்ளனர். அதோடு நிற்காமல், ஆடையின்றி அவர்கள் பூஜை செய்யும் புகைப்படங்களை எடுத்து, அந்த புகைப்படங்களை மனைவியின் குடும்பத்தினர் சிலருக்கு அவர் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி, இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.